திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 30ம் தேதி துவங்கும் ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்ச விழா அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேவஸ்தான சிறப்பு அலுவலர் தலைமையில் திருமலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு முக்கிய வீதிகளில் அதிகாரிகள் அய்வு மேற்கொண்டனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடவுள்ளதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரத்து 51 கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.