திருப்பதி ஏழுமையான் கோயிலில் பக்தர்களின் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது

திருப்பதி ஏழுமையான் கோயிலில் மூன்று மாதங்களாக பக்தர்களின் காணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது. திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏழுமலையான் உண்டியலில் பணம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூலை மாதம் 106 கோடியே 28 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இதேபோல் மார்ச் மாதத்தில் 105 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஜூன் மாதம் 100 கோடி ரூபாயும் காணிக்கையாக பெறப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று மாதங்கள் உண்டியல் காணிக்கை 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆண்டு முடிவில் உண்டியல் காணிக்கை ஆயிரத்து 234 கோடி ரூபாயை எட்டும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version