சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

ஊரடங்கில் தளர்வுகள் அளித்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலை திறப்பதற்கான அனுமதிக்காக திருப்பதி தேவஸ்தானம் காத்திருக்கிறது. இந்நிலையில், அனுமதி வந்தவுடன் கோயிலை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்த பணிகளில், தேவஸ்தானம் கவனம் செலுத்தி வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக, சாமி தரிசன வரிசையில் ரேடியம் ஸ்டிக்கர்கள் பதிக்கப்படுகின்றன. அதேபோல், ஒரு மணி நேரத்திற்கு 500 நபர்களுக்கும், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. வரிசையில் நின்று மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவும், இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை, ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version