கொரோனா தொற்று 3 ஆம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான கோயிலில் அடுத்த மாதம் 7ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
பிரமோற்சவ நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்றும், சாமி ஊர்வலம் கோயில் மாட வீதிகளில் நடைபெறாது என்றும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.