வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மருத்துவம் பார்த்து வந்த 5 போலி மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு புகார் வந்தது. புகாரை அடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஷ்மின் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் திடீர் சோதனையில் ஈடுபட்டார். தோரணம்பதி, ஹவுசிங்போர்டு, புத்தாகரம், கந்திலி, ஆகிய கிராமப்புற பகுதிகளில், படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த சத்தியநாரயணன், குலசேகரன், வெங்கடேசன், மாது மற்றும் ஆனந்தன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதே போன்று, கொணவட்டம், திம்மாம்பேட்டை, ராணிப்பேட்டை, வாலாஜா, குடியாத்தம் உள்ளிட்ட 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.