திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொடி தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில் மாசி மாத பௌர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து மலையப்ப சுவாமி எழுந்தருளினார். மலையப்ப சுவாமி வீதி உலா, நான்கு மாட வீதியில், பக்தர்கள் ஆரத்தி எடுத்து, கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர். கருட வாகன நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சர் ஆதி நாராயண ரெட்டி, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.