சூரிய கிரகணத்தையொட்டிச் சாத்தப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை, மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு 11 மணிக்குத் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதை அடுத்து ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பாவாடை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது. மேலும், நேற்று இரவு மூடப்பட்ட தேவஸ்தான அன்னப் பிரசாதக்கூடம் சுத்தம் செய்யப்பட்டு, மதியம் 2 மணி முதல் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.