நெல்லையில், 30 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு, மரங்களை நட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், 5 லட்சம் பனை மரங்கள் உட்பட, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 2 நாட்களில், இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், குடிமராமத்து பணிகள் மூலம் 50 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.