திருநெல்வேலி வடக்குப் பச்சையாறு நீர்த் தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வரும் 27-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை வடக்குப் பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வடக்குப் பச்சையாற்றில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 14 கிராமங்கள் பாசன வசதி பெறும் என்றும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து, உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.