தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி உள்ளது.