டிக்டாக் குளத்து தவளை ஒன்று, தன் வாயாலேயே கெட்டு தரும அடி வாங்கி நிற்கிறது. ஊரை சுற்றி வம்பிழுத்து திரிந்த கார்த்தியின் காதல் பைங்கிளியை, சேஸிங் செய்து சிறகொடித்து இருக்கிறார்கள் சோழ தேசத்து யவண ராணிகள் சிலர்.
போனில் குடும்பம் நடத்திய டிசம்பர் பூ, புரட்டி எடுக்கப்பட்டதன் பின்னணி என்ன..? பார்க்கலாம்.
திவ்யா ”ஸ்டோனாச்சி”
டிக்டாக் தந்து விட்டு போன ”டிஸ்கவரி சேனல்”. தற்போது யு டியூபை யுத்த களமாக்கி இருக்கிறது.
வியூவ்ஸிற்காகவும், லைக்கிற்காவும் மின் கம்பியில் கூட நடக்க தயங்காத திவ்யா எனும் நாடோடித் தென்றல், சமீபத்தில் திருநங்கைகளை வம்பிழுத்து தெருவுக்கு வந்து நிற்கிறது.
கார்த்தி எனும் பெயர் வைத்த அனைவரையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய இந்த கலைக் கூத்தாடி, கண்டெண்ட் பற்றாக்குறை காரணாமாக, கண்ணில் படுபவர்களை எல்லாம் தனக்கு தெரிந்த ஒரே”தாய் மொழி” யால் அர்ச்சித்து ட்ரெண்ட் ஆவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
வணக்கமுங்கோ சீலா தொடங்கி, நாகலாபுரம் சுகந்தி வரை, அவர் வாய் அள்ளிப் பருகாத ஆட்களே இல்லை.
கடந்த மாதம் சுகந்தி, இவருக்கு கொடுத்த சுளுக்கு சிகிச்சை, ரியாலிட்டி ஷோ வரைக்கும் பஞ்சாயத்திற்கு வந்து ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டது.
டெல்டா விவசாயிகள் முப்போகம் விளைவிக்கும் அளவிற்கு, திவ்யா அந்த ஷோவில் கண்ணீர் வடித்தார்.
அன்று அவரை சிறப்பு குழந்தையாக பாவித்து, ஏறக்குறைய எல்லோருமே பரிதாபம் கொண்டார்கள்.
ஆனால், தனது ”சூப்பர் மார்க்கெட்” வாயால், அவர்களை மீண்டும் எரிச்சல் மோடிற்கு திருப்பியுள்ளார் இந்த இம்சை அரசி.
கடந்த வாரம் திருநங்கைகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து, லிட்டில் பிரின்சஸ் வெளியிட்ட ஒரு குட்டி வீடியோதான், யவண ராணிகள், ”திவ்ய” பிரதேசத்தை ரவுண்டு கட்ட காரணமாக அமைந்திருக்கிறது.
யு டியூபில் சவால் விடுத்த இம்சை அரசி, திருநங்கைகள் நேரில் வரும் தகவல் அறிந்ததும், போனை ஏரோ பிளைன் மோடில் போட்டு விட்டு, எகிறி குதித்து ஓட்டம் பிடித்துள்ளார்.
பின் தஞ்சை நகர் வீதியில் திவ்யா தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல் வர, சம்பவ இடத்திற்கு விரைந்த திருநங்கைகள், அவரை பிடித்து வந்து சம்பவம் செய்திருக்கிறார்கள்.
”வாய் எனது, போன் எனது” உனக்கேன் கொடுக்க கிஸ்தி என்று வாய்ச்சவடால் விட்ட கட்டபொம்மியை, ஒரு ஊரே கட்டி வைத்து பாடம் புகட்டி இருக்கிறது.
பாடம் புரிந்ததோ இல்லையோ, வலி தாங்க முடியாத அந்த ”வலிமை அப்டேட்” காலில் விழுந்து மனிப்பு கோரி, தப்பிப் பிழைத்து தஞ்சாவூர் எல்லையை கடந்திருக்கிறது.
திவ்யா எனும் அதிசய பிறவி அடிக்கடி இப்படி சர்ச்சையில் சிக்கும் போதெல்லாம், நமக்கு தோன்றுவது ஒன்றுதான்.
இது லூசா இல்லை லூசு மாதிரி நடிக்குதா!