டிஜிட்டல் உலகில் நாம் எதையும் வரவேற்க வேண்டும் என்பது மறுப்பதற்க்கில்லை, ஆனால் அது சமூதாயத்திற்கு சீர்ரழிவாக மாறிவிட கூடாது…டிக் டாக் என்ற செயலி தமிழக மக்களிடையே எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்களாம்…
டிக் டாக் எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் 150 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பட்டிதொட்டி வரை தன் சாம்ராஜ்யத்தை பரப்பியுள்ளது என்றே கூறலாம்.
ஆரம்பத்தில் திறமைகளை வெளிப்படுத்த மற்றும் பொழுதுபோக்காக என்ற ஆரம்பித்த டிக் டாக் ஒரு கட்டத்தை தாண்டி உயிரோடு விளையாடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
மனைவி கணவனை விட்டு ஓடுவதும், கணவன் மனைவியை விட்டு காணாமல் போவதும் கூட டிக் டாக்கால் நடந்து பலரது குடும்ப வாழ்வில் சூறாவளியை கிளப்பியுள்ளது.
அரை குறை ஆடையுடன் ஆட்டம் போடுவதும்… அதை டிக் டாக்கிலேயே தட்டி கேட்டால் என் ஆடை என் உரிமை என்று மற்ற பெண்களுக்கு தவறான உதாரணமாக மாறுவதும் கூட டிக் டாக்கில் சகஜம்…
டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் ஆரம்பித்து ஒருவரது மொத்த சொத்தையும் எழுதி வாங்கும் அளவிற்கு மற்றவர்களை ஏமாற்றும் ஒரு கருவியாக மாறியுள்ளது டிக் டாக்…
கணவன் மனைவி வீட்டிற்குள் செய்யவேண்டியதை எல்லோருக்கும் தெரியும் வகையில் சினிமா பாடலின் நடன அசைவுகளோடு இவர்கள் செய்யும் சேட்டை பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும்…
இளம் தலைமுறையை முழுவதுமாக வளைத்துப் போட்டிருக்கிறது இந்த டிக் டாக் ஆப். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் தொடங்கி கல்லூரி முடித்து வேலைக்கு போகும் இளைஞர்கள் வரை பெரும்பாலானோரை எல்லை மீற வைத்துள்ளது டிக் டாக்…
மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக கணவன் மனைவி குழந்தைகள் என அனைவரையும் மறந்து டிக் டாக்கில் மூழ்கி கிடக்கின்றனர் சிலர்…
சில மணி துளிகளில் பிரபலம் ஆகிவிடலாம் என்பதால் இந்த ஆப்பை பயன்படுத்துவோர் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பது கொடுமையின் உச்சம்…
தற்போது டிக் டாக் பஞ்சாயத்துக்கள் அதிகமாக காவல்நிலையத்தின் கதவை தட்டிக்கொண்டிருப்பது தான் உண்மை…
டிஜிட்டல் உலகில் எதையும் நாம் வரவேற்க வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை… அதே சமயம் எதற்கும் ஒரு எல்லையை வகுத்து செயல்படவேண்டும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…