நீலகிரியில் ரோந்து வாகனத்தை பின் தொடர்ந்த புலி: பயணிகள் அச்சம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற ரோந்து வாகனத்தை புலி ஒன்று துரத்தியதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளை காண வனத்துறை மூலம் ரோந்து வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வன பகுதிக்குள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் வனத்துறையின் ரோத்து வாகனம் 6 பேர் கொண்ட பயணிகளுடன் வனத்திற்குள் சென்றது. அப்போது அப்போது புலி ஒன்று மரத்தின் அடியில் அமர்ந்திருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக புலி அவர்களை நோக்கி பாய்ந்து வந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் அலறினர். பிறகு அங்கிருந்து ரோந்து வாகனம் வேகமாக வெளியேறியது.

Exit mobile version