எம்.கே. தியாகராஜ பாகவதரின் 109 பிறந்ததினக் கொண்டாட்டம்

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் 109வது பிறந்த தினத்தை நாமக்கல்லில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தன்னுடைய வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். எம்.கே.டி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் 109வது பிறந்த தினம் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.திரைப்பட நடிகரும் கர்நாடக இசை மேதையுமான எம்.கே.டியின் பிறந்ததினத்தையொட்டி நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்த்தூவி மரியாதை செய்தனர்.எம்.கே.டியின் நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். பிறந்ததினக் கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Exit mobile version