கொரோனா சிகிச்சை மையத்தில் சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என புகார்

திருச்சி மாவட்டம் துவாக்குடி என்.ஐ.டியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நேரத்திற்கு உணவு கிடைப்பதில்லை என்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட இம்மையத்தில், தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு சரியான முறையில் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என நோயாளிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேரத்திற்கு உணவு கிடைக்காததால் சர்க்கரை நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே மையத்தின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆரோக்கியராஜ் என்ற நோயாளி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சிகிச்சை மையத்தின் பாதுகாப்பு தன்மை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version