வளரும் தமிழகம் கட்சியை அதிமுகவுடன் இணைத்துகொண்ட துரையரசன்!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில், வளரும் தமிழகம் கட்சி தலைவர் துரையரசன் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வளரும் தமிழகம் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சூர்யா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

YouTube video player

Exit mobile version