வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், உள் தமிழகத்தின் சில இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல், இந்த மாதம் 13 ம் தேதி வரை, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை அளவான 407.4 மில்லி மீட்டரில், 5 சதவீதம் கூடுதலாக 425.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.