தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்கள் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 19ஆம் தேதி வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version