தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மலையோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் லட்சத் தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.