வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடக, கேரளா, மகராஷ்ட்ரா, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு 6-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.