தமிழகத்தின் 4 மாவட்டகளில் லேசான மழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம், தருமபுரி, கரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் வரும் நாட்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை முற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version