தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்பன் புயல் உருவான போது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வெப்பக் காற்று வீசுவதை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், இன்று வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையப் பொருத்தவரை அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.