இடி, மின்னல் குறித்து முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

இடி, மின்னல் குறித்து முன்கூட்டியே கணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயற்கை பேரிடர்களை ஓரளவு முன்கூட்டியே கணித்து அதன் மூலம் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன. இருப்பினும் அவ்வபோது தவிர்க்க முடியாத சூழலில் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இந்தநிலையில் இடி, மின்னல் குறித்து முன்கூட்டிய கணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்படத்தை உருவாக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இடி, மின்னல் குறித்து தொலைபேசி மூலம் எளிதில் பொதுமக்கள் தகவலை தெரிந்துக்கொள்ள முடியும். நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டியலில் இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version