சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, 3 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கையொட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சென்னை வியாசர்பாடியில், அஜித் குமார், அஜய், ஜெகதீஷ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவர் மீதும், கொடுங்கையூர், எம்.கே.பி நகர், ஓட்டேரி, புளியந்தோப்பு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணைக்காக அவர்கள் காவல் நிலையத்தில் வைத்திருந்த போது, உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளனர்.
பின்னர், 3 பேரும் காவல் நிலையத்தில் இருந்து, கைவிலங்கோடு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.