ஈரோட்டில் கடன் கொடுத்த தொழிலதிபரை கடத்திய 3 பேர் கைது

ஈரோடு அருகே 25 லட்சம் ரூபாய் கடனுக்காக, தொழில் அதிபரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தையைச் சேர்ந்த தொழில் அதிபர் தமிழ்ச்செல்வன், மற்றொரு தொழில் அதிபர் வீரமணிக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரிகிறது. கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி, கடன் கொடுத்த தமிழ்ச்செல்வனை ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தியது. அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த தமிழ்ச்செல்வன், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தார். இதில் பணம் தரக்கூடாது என்பதற்காக தொழிலதிபர் வீரமணி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே, வீரமணி உத்தரவின்பேரில் கடத்தலில் ஈடுபட்ட விவேக், கார்த்திக், சிவபிரசாத் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கியகுற்றவாளி வீரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version