கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, மதசார்பற்ற ஜனதா தள முன்னாள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 முன்னாள் எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரை அக்கட்சியிலிருந்து அவர்களை விடுவிப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.டி, தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ க்கள், எச்.விஸ்வநாதன், கே.கோபாலையா, கே.சி .நாராயண கவுடா ஆகியோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 அதிருப்தி முன்னாள் எம் எல் ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து 3 பேரும் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.