மூணாறு நிலச்சரிவு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!!

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில், அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக, கடந்த 6ம் தேதி பெட்டிமுடி தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழு தகவல்களை பெறுமாறும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவத்தில், உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு, தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version