காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் நசீர் சத்ரு உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால், தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version