மெட்ரோ ரயில் ஊழியர்கள் மூவர் இடைநீக்கம்

மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு பாதிக்க செய்ததாக 3 ஊழியர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் 2ம் கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு பாதிக்க செய்ததாக மூன்று ஊழியர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. ஊழியர்கள் போராட்டத்தின் போது மனோகரன், பிரேம்குமார், சந்தியா ரோஷன் ஆகிய மூவரும் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்து சிக்னல் கட்டுப்பாட்டை சீர் குலைத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version