மின் கட்டணத்திற்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என நூல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஆடை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்குள்ள நூற்பாலைகள் தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலமாக வெளி மாநிலங்களில் இருந்து கிடைக்கும் பஞ்சு தரம் குறைந்துள்ளதால், நூற்பாலைகளின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதாகவும், ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் சரிவு கண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மின்சாரத்தில் சலுகைகள் வழங்கி நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.