கேரளாவில் அமைந்துள்ள உயரமான சிவலிங்கத்தை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே அதிக உயரமான சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை அருகே, செங்கல் மகேஸ்வரம் சிவ பார்வதி கோயிலில் 111 புள்ளி 2 அடி உயர சிவலிங்கம் அண்மையில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளைக் கொண்டதாக உள்ளது. லிங்கத்தின், உள்பகுதி நடைபாதை ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவர், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வாஜ முனிவர், அகத்தியர் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, முக்கிய சிவாலயங்களில் காணப்படும் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தியானம் செய்வதற்காக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உயரம் கொண்ட இந்த சிவலிங்கம், இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளது. அதிக உயரம் கொண்ட இந்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version