ஓசூர் அருகே மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், அறுவடைக்கு தயாராக இருந்த குலை தள்ளிய ஏராளமான வாழை மரங்கள் கீழே விழுந்து சேதமானது. தற்போது வாழைப்பழங்களுக்கு நல்ல விலை கிடைத்து வரும்நிலையில், சேதமான வாழை மரங்களில் குலை தள்ளிய ஒரு தார் 50 கிலோ வரை எடையுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவைகள் காற்றில் சாய்ந்துள்ளதால், 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.