தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 38 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 875 பேரில், ஆயிரத்து 153 பேர் ஆண்கள், 722 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ((NEXT))
அதிகபட்சமாக சென்னையில், ஆயிரத்து 407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் புதிதாக 127 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 19 பேரும், திருவண்ணாமலையில் 20 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்((NEXT))
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆயிரத்து 372 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது. 53 புள்ளி 48 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று, 23 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. 17 ஆயிரத்து 659 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.