வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.