சென்னையில் இன்று நடைபெறும் ’வாக்காளர் அட்டை – ஆதார்’ இணைப்பு முகாம்கள்!

aadhar voter id link

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது.

வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரை அணுகி, ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளுமாறும், தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது செல்போன் எண்ணை எடுத்து வருமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version