நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 அமைப்புகளின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாட்டின் அனைத்து கணினிகளிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை கண்காணிப்பது, அதன் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
அதன்படி உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு தேவைப்படும் தகவல்களை உரிய நேரத்தில் கொடுத்து உதவ வேண்டும் என்றும், அவ்வாறு அளிக்க தவறினால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.