வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.
2 கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்ட், ஓய்வூதிய ஆவணம், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, பாராளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை, 100 நாள் பணிக்கான அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.