இரு குழந்தைகளுக்கு மேல் பெற்ற வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்குட்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகளை தேர்தல் ஆணையம் வரையரை செய்துள்ளது. அவைகளை பூர்த்தி செய்யாத நபர்களின் வேட்பு மனுக்கள், பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்படும். இதனிடையே இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதல் விதியை வகுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.