தூத்துக்குடி மலேசியா மணல் வழக்கு விசாரணை- டிச,. 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி மலேசியா மணல் வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் பற்றாக்குறையை அடுத்து மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மணலை தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

Exit mobile version