தூத்துக்குடியில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 73 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடப் பணிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அடிக்கல் நாட்டினார். பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் மக்கள் பயனுக்கு வரும் என கூறினார். மேலும், அரசின் வழிமுறைகளை கடைபிடித்து, தொற்று பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி முறையான சிகிச்சை வழங்கியதால் தான், தூத்துக்குடி மாவட்டத்தில் இறப்பு சதவிகிதம் 0.63 என்கிற அளவில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version