ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை!!!

ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை எண்ணி, அந்நாட்டு ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை செய்து கொண்டது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ், உலக அளவில் நேரடியாகவும், மறைமுகமாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலக அளவில் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 450க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் ஜெர்மனி சந்தித்து வரும் நெருக்கடியை நினைத்தும், மக்களின் பொருளாதார தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றியும் கவலையடைந்த, ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சனிக்கிழமை அன்று ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து, அவரின் உடல் மீட்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறித்து தாமஸ் ஷாஃபர் சில நாட்களாகவே கவலையில் இருந்ததாக, ஹெஸ்ஸி மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version