காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்படும்: முதலமைச்சர்

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கூறினார். மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அப்போது முதலமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

மேலும்  குடிமராமத்து திட்டம் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதிலளித்த முதலமைச்சர், திமுக எப்போதும் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும் என்றார்.

Exit mobile version