அந்தியூர் அடுத்த பர்கூர் மலையில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலையில் 35 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பலா சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பலாப்பழம் அதிக சுவை உள்ளதால், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு பலாப்பழத்தை வாங்கிச் செல்வது வழக்கம். அந்தவகையில், பர்கூர் மலையில் பங்குனி மாதத்திற்கு முன்னதாகவே பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. இதனால் ஒரு பலாப்பழம் 300 ரூபாய் வரை விற்பதாகவும், கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகரித்துள்ளதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.