இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்பனையில் மந்தம் ஏற்பட்டதாகவும், சுமார் 50 சதவீதம் மட்டுமே பட்டாசு விற்பனை நடந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவால் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்தது. இதனால் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்ததாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடிப்பது தொடர்பான நேரம் குறித்த குழப்பம் காரணமாக பட்டாசு விற்பனையில் மந்தம் ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு இருந்ததைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை குறைவாக இருந்தாகவும், 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை மட்டுமே விற்பனை ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.அது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குகள் போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பட்டாசு வாங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டியதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.