’நயன்தாரா என்றாலே மாஸ்’ என கூறும் வகையில் தனது நடிப்பின் மூலம் நம்மை கதையின் உள்ளே அழைத்து செல்லும் ஆற்றல் இவருக்கு உண்டு என்று கூறினால் மிகையாகாது. இளைஞர்களின் கனவு கன்னியாக விழங்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’ஐரா’ திரைப்படம் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.அந்த டீசரானது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்பை பெற்றுள்ளது.மாயா, டோரா,அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்த நயன்தாரா தற்போது ஐரா திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் .
ஐரா திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இதில் யோகி பாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.லட்சுமி, மா போன்ற குறுபடங்களை இயக்கிய சர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதே சமயம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளையும் பெற்றது.இரண்டு படங்களும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐரா திரைப்படமும் பெண் சிசு கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின் தொடக்கத்திலேயே ’மறுபடியும் பொட்ட பிள்ளை பிறந்திறுக்குனு’ ஒரு பெண் சொல்வது போலவும், ‘மறுபடியும் பொட்டபிள்ளையா’ என பதில் கூறுவது போலவும் அமைந்துள்ளது. ‘ நான் சொன்னேன்ல உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல’ என்ற வாசகம் யாரிடம் சொல்கிறார்? ஏன் அந்த வார்த்தை ? எதற்கு சொல்கிறார் ? என்ற பல கேள்விகளை மனதில் எழுப்புகிறது.ஆனால் இதற்கான விடை படத்தை பார்த்தால் மட்டுமே தெரியும்.
‘ எல்லோருக்குமே சந்தோஷமா வாழனும்னு ஆசைதான்,ஆனால் வாழ்க்கையில எதுவுமே சந்தோஷமா கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஒரு ஆசை தான்’ என்று வாசகத்தோடு டீசர் முடிந்துள்ளது.பட்டாம்பூச்சிகள் படத்தில் கதாநாயகியுடன் தொடர்பு கொள்வது போலவும்,ஆங்காங்கே பறப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளது. அதே போல் திரைப்படத்தின் டைடிலிலும் பட்டாம்பூச்சிகள் இடம்பெற்றிருக்கிறது. எனவே பட்டாம்பூச்சிகள் மூலம் கதையில் ஏதேனும் கூறலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.மேலும் டைடிலில் ‘ஐரா’ என்ற வாசகத்தில் இருமுகம் நேருக்கு நேர் பார்பது போலவும் அமைந்துள்ளது.
இப்படத்தில் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாரே அமைந்துள்ளது.மேலும் ஆங்காங்கே பயமுறுத்துவது போல காட்சிகள் அமைந்து இருப்பதால் இது ஹாரர் திரைப்படமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதில் கருப்பு, வெள்ளை என நயன்தாரா இருவேடங்களில் நடித்துள்ளார்.வெள்ளை நயன்தாராவின் தோற்றம் மார்டனாகவும், கருப்பு நயன்தாராவின் தோற்றம் மிகவும் பயந்த சுபாவம் உள்ள கிராமத்து பெண் போலவும் அமைந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் என்ன சம்மந்தம் என்பதை நோக்கி படத்தின் கதை நகரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, ஐரா படத்திலும் இரட்டை வேடங்களில் நடிப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை வலுவாக இருக்கும் என்றே நம்பலாம்.