'கேப்மாரி' பட தலைப்புக்கு இது தான் காரணம் : எஸ்.ஏ.சந்திரசேகர்

ஜெய் நடிப்பில் வெளியாக உள்ள படம் “ கேப்மாரி ” இப்படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளிக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம் “டூரிங் டாக்கீஸ்’ .மூன்று ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவுள்ள ‘கேப்மாரி’ படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்தப் படத்துக்கு ஏன் ‘கேப்மாரி’ எனத் தலைப்பு என கேள்வி எழுந்தது, இதற்கு பதிலளித்த இயக்குநர் ,தற்போது திரையரங்குகளுக்கு அதிகம் வரும் இளைஞர்களுக்காக இரண்டு படம் எடுக்க விரும்பியதாக தெரிவித்த அவர், இப்படத்தின் கதை இன்றைய இளைய சமூதாயத்திற்கு வரும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் எனவும், அறிவுரையாக இல்லாமல் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

‘ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றிப் போட்டு ஏமாற்றுபவர்களை ‘கேப்மாறி’ விளையாடுபவர்கள் என்று அழைத்தார்கள். பின்னர் ‘கேப்மாரி’ என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறான் என்னும் போது இந்தத் தலைப்பு பொருத்தமாக இருந்தது என படத்தின் தலைப்பிற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version