ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் 500க்கும் அதிகமானோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் தண்ணீரில் கலக்கப்பட்டிருந்த ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் திடீரென பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுடன், விநோதமாக சப்தம் எழுப்புவதாக தெரியவந்தது. இந்த பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட ஆய்வறிக்கை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சமர்பிக்கப்பட்டது. இதில் லீட் ((lead)) மற்றும் நிக்கல் ((nickel)) உலோகங்கள் குடிநீரில் கலந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version