மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

உடல்நலக்குறைவால் உயிரிழந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று மாலை உயிரிழந்தார். கணைய புற்றுநோயால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பனாஜியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.பாரிக்கர் மறைவையடுத்து, இன்று தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து பஞ்சிம் பகுதியில் உள்ள கலா அகாடமிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கோவா செல்லும் பிரதமர் மோடி, மனோகர் பாரிக்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

Exit mobile version