பெண்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது விண்வெளி நடைப்பயணம்

விண்வெளியில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும், முதலாவது விண்வெளி நடைப்பயணம், வரும், 21ல் நடைபெறும்’ என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், பராமரிப்பு உட்பட, பல்வேறு பணிகளுக்காக, விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு, சில மணி நேரம் வெளியே சென்று, மிதந்தபடி பணி செய்வது வழக்கம். இதுவரையிலும், ஆண் வீரர்களின் துணையுடன் தான், பெண் வீராங்கனையர், ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று வந்தனர். இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைப்பயண நிகழ்வுக்கு, மார்ச் மாதத்தில், நாசா ஏற்பாடு செய்திருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக, இந்த நிகழ்வை, நாசா ரத்து செய்தது.
இந்நிலையில், இந்த நிகழ்வு, 21ல் நடத்தப்பட உள்ளதாக, நாசா அறிவித்து உள்ளது. இதில், விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச்சுடன், ஜெசிகா மேயர் என்ற வீராங்கனை பங்கேற்கிறார்.

Exit mobile version