நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர்க்கு , தென்னிந்திய முறைப்படி தனது திருமணத்தை செய்துக் கொள்ள விருப்பம் என்று கூறியுள்ளார்.
ஹிந்தி திரையுலகில் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் ” தடக் ” என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி பல ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் , தற்போது “குஞ்சன் சக்சேனா” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்… திருமணம் எப்படி நடக்க வேண்டும்… என்பது குறித்து ”பிரைட்ஸ்” பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் இவர் வருங்கால கணவர் திறமைசாலியாகவும் , நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருக்க வேண்டும். அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நான் பார்த்து ஆச்சர்யப்பட்டு அவரிடமிருந்து பல விஷயங்களை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தென்னிந்திய முறைப்படி திருமணத்தின் போது காஞ்சிபுரம் பட்டு அணிந்து திருப்பதியில் திருமணம் செய்துக் கொள்ள ஆசை இருப்பதாகவும் , தென்னிந்திய உணவு வகையான இட்லி , சாம்பார், தயிர் சாதம் ஆகியவை விருந்தினர்களுக்கு அளிக்கயுள்ளதாகவும் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.